இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மறை மாவட்ட கிருஸ்தவ ஆயர் லாரன்ஸ் பயஸ்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் பெருமை பற்றி தியாகம் குறித்தும் சிறப்புரையாற்றினார், கிறிஸ்துவ பட்டியல் இனம் மற்றும் பழங்குடியின பணிக்குழு இணைச் செயலாளர் ,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் நல சங்க பொது செயலாளர் டாக்டர் எம். எப். ரமேஷ் கலந்து கொண்டார்.
இதில், அச்சுவர் ஸ் அகாடமி பள்ளியின் தாளாளர் ஜான் மில்லர், திமுக மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மோகன்தாஸ், அரூர் மறை மாவட்ட முதன்மை குரு ஆரோக்கிய ஜேம்ஸ் , தர்மபுரி மறைமாவட்ட பட்டியல் இன மற்றும் பழங்குடியினர் பணி குழு செயலாளர் பாதர் மோசஸ், தர்மபுரி மீட்பு பணி மைய இயக்குனர் பாதர் ஜாக்சன் லூயிஸ் ,தர்மபுரி மறை மாவட்ட பெண்கள் பணிக்குழு செயலாளர் ரோஸ்லின் ஜீவா, தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட பொருப்பாளர் ஜான் அக்பர்,சமூக செயல்பாட்டாளர் பிரபாகரன் மற்றும் ஏராளமான பிரதிநிதிகள் இதற்கு கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், பெண்கள் பெருமையை பேசும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதில் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவியர் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக