தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வரும் சம்பவம், பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கும் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு எர்ரனஅள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது, சாகசம் செய்த வாலிபர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர்.
இதையடுத்து, சாலை விதிகளை மீறி, தலைகவசம் அணியாமலும், மது போதையில் இருசக்கர வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடுமையாக எச்சரித்து அனுப்பினர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக