அங்கன்வாடி மையங்களில் மாதந்தோறும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் 6 /24 மாத குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவை வழங்க, கண் கருவிழி ஸ்கேன், அங்கன்வாடி மையத்திற்கு வரும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு முகப்பதிவு போட்டோ எடுத்து கட்டாயம் போட வேண்டும் என்ற திட்டத்தை கைவிடவேண்டும். மே மாதம் வழங்கப்படும் கோடை விடுமுறையை அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதமாக வழங்கிட வேண்டும்.
1993-ம் வருடம் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை – II பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.ஐசிடிஎஸ் திட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மையங்களை பொறுப்பு பார்ப்பதால் ஊழியர்களுக் மிகுந்த பணிச்சுமை ஏற்படுகிறது. இத்திட்டத்தில் சமூக நலத்துறையில் காலியாக உள்ள அனைத்து காலி பணியிடங்களில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நியமனம் செய்தனய வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ராஜம்மாள் தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் சி. நாகராசன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் எம். லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் சி. கவிதா மாவட்ட பொருளாளர் என். தெய்வானை, நிர்வாகிகள் ஆர். கண்மணி, ஆர். சத்யா, எஸ். காளிஸ்வரி, கே. கலா, ஜாண்சி, எஸ். அல்வியா, ஜெயந்தி, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக