தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சியின் சொன்னம்பட்டி கிராமத்தில், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறை மற்றும் புதிய கணினி வகுப்பறை கட்டப்பட்டு வருகின்றன.
அதேபோல், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார வளாகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.பி. அன்பழகன் MLA அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி, கட்டிடப் பணிகளை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காவேரி, அதிமுக தகவல் தொழில்நுட்ப சேலம் மண்டல இணைச் செயலாளர் சாந்தகுமார், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக