தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கர்த்தாரஅள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட சுங்க சாவடியில் சுங்க கட்டணத்தில் விலக்கு கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று மதியம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுங்க கட்டணத்தில் வரி விலக்கு அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து மாலை 6 மணிக்கு விடுதலை செய்தனர்.
போலீசாரின் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் சிவன் (வயது .50) ஒன்றிய செயலாளர் குமார் (வயது. 49) தெற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் (வயது.35)இணை செயலாளர் கிருஷ்ணன் (வயது .45) ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் (வயது.42) உள்ளிட்ட 168 தமிழக வெற்றி கழகத்தினர் மீது திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக