தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் 3,000-க்கும் மேற்பட்ட தேர்வு தொடர்பான புத்தகங்கள், இணைய வசதி கொண்ட நூலகம், மற்றும் 20-க்கும் மேற்பட்ட கணினிகள் learnersக்காக செயல்பட்டு வருகின்றன. பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டில் தி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்காக 70 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2024 ஆம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில், தருமபுரி மையத்தில் பயிற்சி பெற்ற 15 மாணவர்கள் வெற்றி பெற்று, அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்சாதனையை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன், சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி தீபா உடன் இருந்தார்.
தருமபுரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் மேலும் உயர் நிலை அரசு பணிகளில் சேர உறுதுணையாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக