பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு புகையிலை பொருட்கள் மற்றும் தரமற்ற தண்ணீர் கேன் விற்பனை செய்த கடை இயங்க தடை ரூபாய்.50200 அபராதம் விதிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 மார்ச், 2025

பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆய்வு புகையிலை பொருட்கள் மற்றும் தரமற்ற தண்ணீர் கேன் விற்பனை செய்த கடை இயங்க தடை ரூபாய்.50200 அபராதம் விதிப்பு.

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, பாலக்கோடு  துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் அவரவர்கள் ஆலோசனைப்படி  காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு காவலர் சக்திவேல், உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாலக்கோடு   பேருந்து நிலையம், எம்.ஜி. ரோடு, பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள்,  மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர். 

ஆய்வில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், ஒரு பீடா  கடையில்  சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். உதவி ஆய்வாளர் கோகுல் மேற்படி விற்பனையாளர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து மேற் நடவடிக்கைக்கு நியமன அலுவலர்க்கு பரிந்துரைத்து   அவர் உத்தரவின் பேரில், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடை இயங்க  தடை விதித்துடன் ஏற்கனவே இக்கடை உரிமையாளர் ஏற்கனவே ஒரு முறை புகையிலை பொருட்கள் விற்பனை செய்து பிடிபட்ட காரணத்தால் மீண்டும் ஒருமுறை தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்து பிடிபட்டதால்  உடனடி அபராதம்  ரூபாய்.50000 விதிக்கப்பட்டு  கடை அடைக்கப்பட்டது.  


உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நந்தகோபால், ஆய்வின் போது முத்து கவுண்டர் தெருவில் ,  அடைக்கப்பட்ட குடிநீர் கேன்கள் பாட்டில்கள், சப்ளை செய்யும் ஒரு கடையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆயிரம் கொள்ளவு உள்ள கலனி(டேங்க்) லிருந்து  20லிட்டர் கேன்களில் பிடித்து விற்பனை செய்வது கண்டறிந்து மேற்படி டேங்க் குடிநீரை வெளியேற்றி இரண்டு தினங்களுக்குள் அதை அப்புறப்படுத்தவும் முறையான உணவு பாதுகாப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ அனுமதி உள்ள அங்கீகரிக்கப்பட்ட அடைக்கப்பட்ட குடிநீர் கேன்கள், உரிய விபரங்கள் அச்சடிக்கப்பட்ட கம்பெனி தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண், தயாரிப்பு மற்றும் முடிவு தேதி உள்ள 20 லிட்டர் கேன்கள், 2 மற்றும் 1 லிட்டர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை, சப்ளை செய்திடவும், நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா உத்தரவுப்படி,  உடனடி அபராதம்  ரூபாய்.2000   விதித்து  விதிமுறைகள், வழிமுறைகள் பின்பற்ற வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad