பாப்பாரப்பட்டி அருகே பவர் கிரேட் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

பாப்பாரப்பட்டி அருகே பவர் கிரேட் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து பாப்பாரப்பட்டி அருகே உள்ள பால்வாடி பகுதியில் பவர் கிரேட் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இருந்து 400 கிலோ வாட் திறன் கொண்ட மின்சார டவர் புலி கரைப்பகுதிக்கு செல்கிறது. 


இதில் பாலவாடி, மாக்கனூர், கானாப்பட்டி, ஓ.ஜி.அள்ளி, உள்ளிட்ட கிராமங்களின் வழியாக செல்கிறது. இதில் பல்வேறு விவசாயிகளின் நிலத்தில் வழியாக செல்கிறது. இந்த டவர் அமைத்து இரண்டு வருடங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவில்லை என்று இன்று பாலவாடி பகுதியில் அமைந்துள்ள பவர் கிரேட் நிலையத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் விவசாயிகளை சமாதானப்படுத்தினார். அதன்பின் தகவல் அறிந்து வந்த  உதவி செயற்பொறியாளர்  எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad