தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டர் தின்ணை பகுதியில் நீண்ட நாட்களாக நியாய விலை கடை பள்ளி கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில், சொந்தமான கட்டிடத்தில் நியாய விலை கடை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி உடனடியாக நடவடிக்கை எடுத்து பஞ்சப்பள்ளி ஊராட்சி பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலியிருந்து 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் சிரஞ்சீவி, திமுக ஒன்றிய செயலாளர்கள் பஞ்சப்பள்ளி அன்பழகன், வழக்கறிஞர் எம்.வீ.டி. கோபால், முனியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், அவைத்தலைவர் முருகன், துணைச் செயலாளர்கள் சண்முகம், அண்ணாமலை, சரிதா குமார், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, கவுன்சிலர் கார்த்திகேயன், வழக்கறிஞர் வடிவேல்,சாமனூர் ராஜா,குட்டி(எ)வெங்கடேசன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், முகுந்தன், மணிவண்ணன், வீ.சி. குமார்,கங்கா,ஜே எம் சக்தி, தர்மலிங்கம், முனிமாறன், தொ.மு.ச. சீனிவாசன் மற்றும் கிளை செயலாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக