தருமபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு தீர்த்தகிரி ஈஸ்வர் வடிவாம்பிகை திருக்கோயிலின் சார்பாக வனச்சரக அலுவலகத்தில் மாவட்ட வன அலுவர் இராஜாங்கம் பரிந்துரையின்படி தீர்தமலை வனசரக அலுவலர் கோகுல் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ குழுவினர் மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டு பின்பு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு கண் புரை உள்ளவர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துதுரை செய்யப்பட்டது.
இதில் வனவர் ராஜன், வனகாப்பாளர்கள் மல்லிகா, ஜெயலட்சுமி, கல்பனா, சுரேஷ், ஜிவானந்தம், வன காவலர் சிற்றரசு, வட்டார மருத்துவ அலுவலர் அழகேசன், கண் மருத்துவர் கலையரசன், மருத்துவ அலுவலர் பரத்வாஜ், சித்த மருத்துவ அலுவலர் தீபிகா, இயன்முறை மருத்துவர் வசந்தா, சுகாதார ஆய்வாளர் நந்தகோபால், ஆய்வக நூட்புனர் கண்னன், இல்லம் தேடி மருத்துவ குழுவினர்கள் சந்தியா, லாவன்யா, தமிழரசி, பிரியங்கா, முத்துசெல்வி மற்றும் 250 க்கும் மேற்பட்டோர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக