ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி; நாளை பிறந்தநாள் இன்று ஆற்றில் ழூழ்கி இறந்த சோகம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலி; நாளை பிறந்தநாள் இன்று ஆற்றில் ழூழ்கி இறந்த சோகம்.


தருமபுரி மாவட்டம் தருமபுரி அடுத்து அரியகுலம் அருகே உள்ள பி.மோட்டுபட்டியை சேர்ந்த பழனி சாந்தி தம்பதியின் மகள் மேனிகா (16) கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்11 வகுப்பு படித்து வருகிறார். இன்று  குடும்பத்துடன் இன்று டிரவல்சில் தனது உறவினர் இறந்து மூன்றாவது மாத ஈமசடங்கிற்கு ஒகேனக்கலுக்கு குடும்பத்துடன் வந்து ஆற்றில் குளித்தனர் ஆழமான பகுதிக்கு சென்ற மேனிகா ஆற்றில் அடித்துச் செல்லப்பட  உடனடியாக உறவினர்கள் ஆற்றில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் உடனடியாக ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.


விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி இறந்த பள்ளி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேனிகாவின் பிறந்தநாள் நாளை வர இருப்பதால் இன்று ஆற்றில் மூழ்கி இறந்த மாணவியின் உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad