தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், நெடுஞ்சாலை உணவகங்கள், சிற்றுண்டி , துரித உணவு கடைகள் மற்றும் தாபாக்களில் உணவு, இறைச்சி மற்றும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் பேரில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா வழிகாட்டுதலின்படி பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெங்களூர் நியூ ஹைவேயில் சங்கம்பட்டி, புலிகரை, சோமனள்ளி, எர்ரணஅள்ளி மேம்பாலம் , கொலசனள்ளி, வெள்ளிச்சந்தை மற்றும் பாலக்கோடு எம் ஜி ரோடு, புறவழிச்சாலை, புதூர் மாரியம்மன் கோயில் செல்லும் வழி, தக்காளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகள் மற்றும் பழக்கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்ட குழுவினர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு ஆய்வு செய்தனர்.
ஆய்வில் எர்ரணஅள்ளி மேம்பாலம் புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குளிர்பான கடையில் ஆய்வில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யபட்டது கண்டறியபட்டு பறிமுதல் செய்யபட்டு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக