தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிராஜ் (வயது.45) இவரது மனைவி செல்வி பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.
இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். முனிராஜ் குடிபழக்கத்திற்க்கு அடிமையாகியதால் உடல் நல கோளாறு ஏற்பட்டு வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். மருத்துவர்கள் இனி குடிக்க கூடாது என எச்சரித்துள்ளனர். ஆனால் நேற்று மாலை மீண்டும் மது குடித்துள்ளார். இதனால் வயிற்று வலியால் ஏற்பட்டு வலியால் அவதிபட்டவர் நேற்றிரவு வீட்டின் அருகில் இருந்து மாட்டுக் கொட்டகையின் உத்தரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக