தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மை தருமபுரி அமைப்பின் ஒரு பிரிவான அமரர் சேவையில் இன்று ஆதரவின்றி உயிரிழந்த இளைஞரின் உடலை நல்லடக்கம் செய்தனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஷ் கூறுகையில், தருமபுரி மாவட்டம் மதிகோன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நல்லனஅள்ளி கிராம தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரது பிரேதத்தை கைப்பற்றி மதிகோன்பாளையம் காவல்துறையினர் விசாரித்ததில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை உறவினர்களும் இல்லை. இவரது பிரேதத்தை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து இன்று நல்லடக்கம் செய்யப்பட்டார் என அவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மதிகோன்பாளையம் காவல் நிலைய காவலர் குமரவேல், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ஜலபதி ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 137 ஆதரவற்று ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக