உலக மகளிர் தினத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக தகடூர் தங்கத் தாரகை விருது நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 மார்ச், 2025

உலக மகளிர் தினத்தில் மை தருமபுரி அமைப்பின் சார்பாக தகடூர் தங்கத் தாரகை விருது நிகழ்வு.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக உலக மகளிர் தினத்தில் நம் தருமபுரி மாவட்டத்தில் நூறு சாதனை பெண்களை தேர்ந்தெடுத்து தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் நடைபெற்றது. 


இந்த விருது வழங்கும் நிகழ்வில் ரத்ததான கொடையாளர்கள், மை தருமபுரி அமரர் சேவைக்கு உதவுவோர், மாதந்தோறும் பசிக்குதா வாங்க சாப்பிடுங்க உணவு சேவை திட்டத்திற்கு உதவுவோர், சமூக சேவகிகள், கல்லூரி பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கலைத்துறையினர், எழுத்தாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து மொத்தம் நூறு பெண்களுக்கு தகடூர் தங்க தாரகை விருது வழங்கி கௌரவித்தனர். 


இந்த விழாவிற்கு மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ் தலைமை தாங்கினார், சிறப்பு விருந்தினராக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அய்யா ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள், தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான மாது அவர்கள், ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திருமதி கலாவதி, தருமபுரி அரசு ரத்த வங்கி மருத்துவர் கன்யா, ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் பாபு, PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் சுரேஷ் குமார், BGR மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ், கயல் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் அறிவழகன், ஸ்ரீ சரவணா எலெக்ட்ரிக்கல்ஸ் நிர்வாக இயக்குனர் ராகவன், பத்திர எழுத்தர் சி கே கணேசன், ரயில்வே ஒப்பந்தக்காரர் திரு பரமசிவம், கட்டுமான தொழிலாளர் சங்கத் பொதுச் செயலாளர் திரு கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தகடூர் தங்க தாரகைகளை கௌரவித்தனர். 


இந்த விழாவிற்கு மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா வரவேற்புரை ஆற்றினார், செயலாளர் தமிழ்செல்வன் நன்றியுரை கூறினார். மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஜலபதி ராஜா, அருள்மணி, அருணாசலம், முஹம்மத் ஜாபர், சண்முகம், செந்தில், சையத் ஜாபர், விஜயகாந்த், மூர்த்தி, சபரி முத்து, ஜெய் சூர்யா, கணேஷ், குணசீலன், கோகுல்ராஜ், விமலேஷ், பனிமலர், வள்ளி, பிரேமா ஆகியோர் விருது வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad