”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் நோயாளிடம் தொலைபேசி வழியாக உரையாடிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் நோயாளிடம் தொலைபேசி வழியாக உரையாடிய மாவட்ட ஆட்சியர்.


தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் ”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று கேட்டறிந்தார்கள்.


மேலும், பெரியாம்பட்டி சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்க செய்து, மருத்துவமைன சிகிச்சைக்காக 108 ஆம்பலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் ”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, குணமடைந்தவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.03.2025) கேட்டறிந்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் மீதான கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும் விதமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு சேர்வதை உறுதி செய்வதற்காகவும் முதல்வரின் முகவரி துறையின் கீழ், "நீங்கள் நலமா" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள்.


அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்ற காரிமங்கலம் வட்டம், உச்சம்பட்டியை சேர்ந்த திரு.சபரி அவர்களிடம் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்து தொலைபேசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்கள்.


மேலும், காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்ற காரிமங்கலம் வட்டம், நாகலாம்பட்டியை சேர்ந்த திருமதி.சசிகலா அவர்களிடம் கர்ப்ப கால சிகிச்சைகள் குறித்தும், கர்ப்ப கால தடுப்பூசிகள் உரிய காலத்தில் வழங்கப்ட்டதா என்பது குறித்தும், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க்பட்டது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.


பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் பெரியாம்பட்டி சாலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்க செய்து, மருத்துவமைன சிகிச்சைக்காக 108 ஆம்பலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகளின்போது, வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad