தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக இரண்டு நாள் கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (NET/SET) பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி, ஆங்கிலத்துறை, பேராசிரியர் முனைவர்.பொன் கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரி ஆசிரியர் தேர்வுக்களான NET/SET போன்ற தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவது குறித்தான எளிய வழிமுறைகளையும் அவ்வாறு தயாராகும் போது ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
மேலும் ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பகாலம் முதல் இன்று வரை இருக்கக்கூடிய பல்வேறு எழுத்தாளர்கள் அவர்களின் படைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் இலக்கியங்கள் அவற்றின் எழுத்தாளர்கள் என ஓர் உலகளாவிய ஆங்கில இலக்கிய பார்வையை எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு சிறப்பான ஒரு பயிற்சி கருத்தரங்கை வழங்கினார். இக்கருத்தனுக்கானது தாங்கள் தேர்வுகளுக்கு தயார் ஆவதற்கு ஒரு உந்து சக்தியாக இருப்பதாக நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தொடர்ந்து ஆங்கிலத்துறை தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர். கோவிந்தராஜ் அவர்கள் விழாவிற்கு உரையாற்றி நிகழ்வை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினரை இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி செல்வி ஶ்ரீதா அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி ரித்திகா வரவேற்று பேசினார்.
இறுதியாக முதலாம் ஆண்டு மாணவன் மோகன் குமார் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வை முதலாம் ஆண்டு மாணவி செல்வி சினேகா தொகுத்து வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக