தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.தமிழ் ஆசிரியர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் உயர்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்கே. வி குமார், தயாநிதி, மணி, தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.கலை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மறைந்த தலைவர்களின் வேடம் அணிந்து அவர்களைப் பற்றி பேசினர்.
பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் சார்பில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக