பாலக்கோடு கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பம் மாற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

பாலக்கோடு கடைவீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மின் கம்பம் மாற்றம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடைவீதி, கருமலை ஆண்டவர் உரக்கடை முன்பு  உள்ள மின்கம்பம் மிகவும் மோசமான நிலையிலும் உடைந்து விழும் தருவாயில்  இருந்தது. மேலும் சாலையோரம் போக்குவரத்திற்க்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தினால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன.


தர்மபுரி - ஓசூர் பிரதான சாலையில் உள்ள கடைவீதியில் உள்ள  இதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை சாலையோரம் சற்று தள்ளி உள்பக்கமாக அமைக்க கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர். 


பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்களின் சீரிய முயற்சியில்  பேரூராட்சி தலைவர் முன்னிலையில் பழுதான மின் கம்பம் அப்புறப்படுத்தப்பட்டு இரும்பிலான புதிய மின்கம்பம் போக்குவரத்திற்க்கு இடையூறாக இல்லாத வகையில் உள் பக்கமாக  அமைக்கப்பட்டு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad