தர்மபுரி, மாவட்டம், நெசவாளர் காலணியில் உள்ள மங்காளம்பிக்கை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், தேன், இளநீர், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது, அதனை தொடர்ந்து நந்தி மற்றும் மகாலிகேஸ்வரர் உடன் மங்களாம்பிக்கை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர் கோயில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத மருதவானேஸ்வரர் கோயில், பாரதிபுரம் சிவன் கோயில், தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோயில், பாலக்கோட்டில் உள்ள பால் வண்ணநாதர் கோயில், இண்டூர் ஈஸ்வரர் கோயில், கீழ் பூரிக்கல் கைலாசநாதர் கோயில் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில், மாசி மாத பிரோதஷத்தை முன்னிட்டு இன்று மாலை நந்தி, சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நந்தி பகவான் மற்றும் சிவன், அம்மனை தரிசித்து வழிப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக