ஜே.சி.ஐ தருமபுரி மற்றும் ஜே.சி.ஜ தருமபுரி பில்லர்ஸ் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி, ஸ்ரீ மஹாலக்ஷ்மி சில்க்ஸ் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினம் விழாவை முன்னிட்டு இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வை தர்மபுரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணன் கொடியசைத்து வைத்தார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வைத்தனர். ஜேசிஐ தர்மபுரி அமைப்பினர் சார்பில் துப்புரவு பெண் பணியாளர்களுக்கு சால்வு அணிவித்து பாராட்டினர். இந்த விழிப்புணர்வு பேரணி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி மத்திய கூட்டுறவு வங்கி வழியாக நான்கு ரோடு ரோட்டில் முடிவடைந்தது அங்கு தேசிய உலக பெண்கள் உறுதிமொழி ஏற்று பெண் காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பின்னர் பெண் பாதுகாப்பு குறித்து பேசுகையில் திருணமான ஒவ்வொரு பெண்ணும், அவர்கள் ஒன்றாக வாழாவிட்டாலும், தனது கணவரிடமிருந்து பராமரிப்பு பெறும் உரிமையைப் பெற்றுள்ளனர் பணியிடத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், சம வேலைக்கு சம ஊதியம் பெறும் உரிமை பெண்களுக்கு உண்டு. மேலும் பயம், வற்புறுத்தல், வன்முறை அல்லது பாகுபாடு இல்லாமல், மரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ பெண்களுக்கு உரிமை உண்டு, உடல், உணர்ச்சி மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் உள்ளிட்ட வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு,பெண்களுக்கு இலவச சட்ட உதவி பெறும் உரிமை, நீதி மற்றும் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது என பேசினார் பின்னர் பெண் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் Jc.பாபு, முன்னாள் தலைவர்கள் Jc.ரவிக்குமார், Jc.விஜயகுமார், Jc. கணேஷ், Jc பிரசாந்த், Jc சிவகாமராஜ், Jc. யுவராணி, Jc. நிரோஷா, Jc. சுரேஷ், Jc. பிரசன்னா, Jc. ஸ்ரீனிவாசன், Jc சென்னைய்யன், Jc. நந்தினி அழகர், தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக