பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சாதனைகளை கொண்டாடும் வகையில், பென்னாகரம் தொகுதி அளவில் மல்லிகை மஹாலில், இன்று (11.03.2025) மகளிர் தின பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், கல்வித் துறை, சமூக நலத்துறை, காவல்துறை, சத்துணவு திட்டம், அங்கன்வாடி, சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பெண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, பெண்களின் பங்கு, அவர்களின் சாதனைகள் மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர்களின் உறுதிப்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. மேலும், பெண்கள் பெருந்திரளாக பங்கேற்று, நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக