பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – ஆட்டோ டிரைவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 மார்ச், 2025

பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – ஆட்டோ டிரைவர் கைது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி, 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், அந்த மானைவியிடம் பழகி வந்துள்ளார், இந்நிலையில் கடந்த மார்ச் 7ஆம் தேதி மாணவியை தனது ஆட்டோவில் அருகே மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றார், அங்கு, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவத்திற்குப் பிறகு மனமுடைந்த அந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், அவரது தாய் அவரிடம் காரணத்தை விசாரித்தார். அப்போது, மாணவி உண்மையை வெளிப்படுத்தி, ஆட்டோ டிரைவர் வினோத்குமார் தன்னைத் துன்புறுத்தியதை தெரிவித்தார்.


இதையடுத்து, மாணவியின் தாய் பாப்பாரப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வினோத்குமாரை கைது செய்தனர். மேலும், மாணவியை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


பள்ளி மாணவியை ஆட்டோவில் அழைத்துச் சென்று மலைப்பகுதியில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad