பாலக்கோடு, ஏப்.23:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, மேல் தெருவைச் சேர்ந்த எலக்ட்ரிசியன் நந்தகுமார் (23) மற்றும் சிவபிரகல்யா (21) என்ற காதலர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறி தர்மபுரியில் உள்ள முனியப்பன் கோயிலில் திருமணம் செய்து, நண்பரின் வீட்டில் தங்கி இருந்தனர். இவர்களை பெற்றோர்கள் தேடுவதை அறிந்து, பாலக்கோடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதன்பிறகு, காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் காவல் நிலையத்துக்கு வந்தபோது, சிவபிரகல்யா தன் காதலனுடன் செல்வேன் என கூறியதால், காதலனுடன் அவரை அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக