சொன்னம்பட்டியில் திமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சமூக சமத்துவத்தை வலியுறுத்திய உறுதி மொழி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

சொன்னம்பட்டியில் திமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா: சமூக சமத்துவத்தை வலியுறுத்திய உறுதி மொழி.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் சட்டமாமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, சமூக உணர்வோடு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு ஒன்றியச் செயலாளர் வக்கில் எம்.வீ.டி. கோபால் தலைமையிலானார்.


விழாவில் மாநில விவசாய அணி துணைத் செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மற்றும் மாவட்ட திமுக அணித் தலைவர் சண்முகம், மாதேஸ்வரன், ஜே.எம். சக்தி, பாலமுருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சி ஆரம்பமாக, அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, அன்னதானமும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விழாவில் “தீண்டாமை, சாதி, மத பேதங்களை ஒழிக்க; சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்டுவதற்காக பாடுபடுவோம்” என்ற உறுதி மொழியை அனைவரும் ஒன்றாக ஏற்றனர்.


இவ்விழா, சமத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்வாகவே மாறியது. சமூக நலனுக்காக செயலாற்றிய அம்பேத்கரின் இளமையிலிருந்தே சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய முக்கிய பங்குக்கு நன்றி கூறும் விதமாக “வீர வணக்கம்” செலுத்தப்பட்டது. நிகழ்வில் திமுக கிளை நிர்வாகிகள் கோவிந்தன், பலராமன், மாறன், போத்தராஜ், சக்தி, மணிகண்டன், கன்னியப்பன், சமய செல்வம், குப்பன், ராம்கி உள்ளிட்ட பலரும் பங்கேற்று, விழாவை சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சி, சமூக நீதி, சமத்துவம், கல்வி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரு உணர்வுப்பூர்வமான தருணமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad