தருமபுரி மாவட்டத்தில் புத்தக வடிவில் மாணவர்கள் அமர்ந்து வாசித்த காட்சியுடன் உலக புத்தக தின விழா கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 ஏப்ரல், 2025

தருமபுரி மாவட்டத்தில் புத்தக வடிவில் மாணவர்கள் அமர்ந்து வாசித்த காட்சியுடன் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்.

B2%20-24.4%20(1)

தருமபுரி, ஏப்ரல் 24:
உலக புத்தக தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று “வாசிப்பை நேசிப்போம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தக வடிவில் அமைக்கப்பட்ட பகுதியில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “புத்தக வாசிப்பு என்பது அறிவை வளர்க்கும் ஒளி வழி. புத்தகங்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்க வேண்டும். புத்தகம் என்பது மனதிற்கும், மொழிக்கும் நெருக்கமான நண்பனாக அமைகிறது,” என அவர் தனது உரையில் கூறினார்.


மேலும், புத்தக வாசிப்பின் பயன்கள் குறித்து அவர் உரையாற்றியபோது, “புதிய சொற்களை கற்றறிந்து, சொற்களஞ்சியத்தை விரிவாக்குவதோடு, மனஅமைதி, சிந்தனை திறன், நினைவாற்றல் ஆகியவை மேம்படும்” எனவும் விளக்கினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பள்ளி மாணவர்கள் புத்தகம் வடிவில் அமர்ந்து வாசிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது. இந்நிகழ்வை தகடூர் புத்தகப் பேரவை, மாவட்ட நூலகத்துறை, மாவட்ட கல்வித்துறை இணைந்து ஒருங்கிணைத்தனர்.


நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி தே. சாந்தி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி அர. கோகிலவாணி, தகடூர் புத்தகப்பேரவை செயலாளர் மரு. இரா. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

A2%20-24.4%20(2)%20(1)

நிகழ்ச்சியை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோர் தருமபுரி நான்கு ரோட்டில் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கி சமூகப் பொறுப்பை உணர்த்தும் செயலுக்கு முன்னிலை வகித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad