தர்மபுரி அருகே பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறை சார்பில், முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
2018–2020 முதல் 2022–2024 வரை இந்தத் துறையில் பயின்ற மாணவர்கள் நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கோவிந்தராஜ் சிறப்புரையாற்றி, முன்னாள் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருந்து, வேலை வாய்ப்புகள் இருந்தால் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாங்கள் பயின்ற துறையின் வளர்ச்சிக்காக துணைபுரிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கிருத்திகா வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மாணாக்கர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்விக் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, இத்துறையில் பயின்றது தங்களுக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக