தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி பஞ்சப்பள்ளி ஊராட்சி பட்டாபி நகரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள் விழா அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களின் ஆணைக்கினங்க குபேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம், பாஜக மாநில கல்வி குழு தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புக்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில்கள் வழங்கப்பட்டது
அதனைத் தொடர்ந்து தீண்டாமை, சாதி, மத ஒழிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் நிலைநாட்ட பாடுபடுவேன் என கோஷங்கள் எழுப்பி உறுதி மொழி ஏற்றனர். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் வெங்கடாசலம், முனுசாமி, கன்னியப்பன், மாதப்பன், முத்துராஜ், சிவகுரு, இராமச்சந்திரன் ,முனிராஜி, வழக்கறிஞர் அனிதா, தமிழன், தேவன், சிக்கோனு, தருமன், ரகு, மஞ்சுநாத், நாகரத்தினம், மணி, அமாசி, ராஜி, மாதுராஜ், சிரஞ்சீவி, ஜெயவேல் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக