தருமபுரி, ஏப்ரல் 23:
விண்ணப்பதாரர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மே 7 (ஆண்கள்), மே 8 (பெண்கள்) ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) உள்ளிட்ட விளையாட்டுகளில் தேர்வுகள் நடைபெறும்.
மாவட்டத் தேர்வில் தேர்வாகும் மாணவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்வாகுவர். மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில், சென்னை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரி, திருச்சி ஆகிய இடங்களில் ஜுடோ, வாள்சண்டை, பளுதூக்குதல், குத்துசண்டை, நீச்சல், ஹேண்ட்பால், டேக்வாண்டொ, ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மாநிலத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
விளையாட்டுத் தகுதியாக, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்றுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடியரசு தின, பாரதியார் தின, SGFI மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக