தர்மபுரி, ஏப்ரல் 16: மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியல் அலுவலகம் சார்பில், 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணி, தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கி, தர்மபுரி நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தது.
பேரணியை, புள்ளியல் அலுவலகத்தின் முதன்மை புள்ளியியல் அலுவலர் மதிவாணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியில் புள்ளியல் துறையின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசாதங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி, புள்ளியல் துறையின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்கான முயற்சியாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக