தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள் கடந்த 2022ம் ஆண்டு பாலக்கோடு பகுதியில் +1 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது. 21) என்ற வாலிபர் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்து 15 மாதம் ஆகிறது.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கார்த்திக் சிறுமியை கைவிட்டு பிரிந்து சென்றவர், பாலக்கோடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். கார்த்திக் பற்றி கல்லூரி மாணவியின் தந்தை விசாரித்ததில் கார்த்திக் ஏற்கனவே சிறுமியுடன் திருமணம் ஆனதை மறைத்து தனது மகளை திருமணம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து கல்லூரி மாணவியின் தந்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ வழக்கில் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக