ஜெயம் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஏப்ரல், 2025

ஜெயம் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம்.


நல்லானூர் மருதம் நெல்லி கல்வி நிறுவனம் மற்றும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பாக ஒருநாள் வணிக மேலாண்மை மற்றும் தரவுப் பகுப்பாய்வு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்வி நிறுவனத்தின் தாளாளர் டாக்டர் கா. கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காய்த்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார்.


நிர்வாக இயக்குநர் செந்தில், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி. பரஞ்சோதி ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினர். வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் ம. செல்வம் வரவேற்று பேசினார்.


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பெங்களூர் பி.இ.எஸ் பல்கலைக்கழகத்திலிருந்து தினேஷ் சுந்தரம் கலந்து கொண்டு மாணவர்களிடையே வணிக மேலாண்மை, தரவுகளை சேகரிப்பு மற்றும் தொழில்நுட்ப மென்பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து விரிவாக சிறப்புரையாற்றினார்.


நிகழ்வு நிறைவில் வணிக நிர்வாகவியல் உதவிப் பேராசிரியர் கோ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad