பாலக்கோடு, ஏப்.24:
தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் (வயது 28) ஓசூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி காய்கறிகள் ஏற்றிச் சென்றார். அவர் செலுத்திய சரக்கு லாரி பாலக்கோடு அருகே கல்கூடபட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிதம்பரம் படுகாயமடைந்து லாரிக்குள் சிக்கிக் கொண்டார். அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், லாரியை அப்புறப்படுத்தி பாதிக்கப்பட்ட போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக