இந்த விருதுக்கு 15 முதல் 35 வயதிற்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்க முடியும். விருதுக்கான தகுதிகள்:
-
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 15.04.2024 அன்று 15 வயதுக்கு பூரணமாக இருக்க வேண்டும் மற்றும் 31.03.2025 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
சேவை காலம்: 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொண்ட சமுதாய சேவை மட்டுமே பரிசீலிக்கப்படும்.
-
தமிழகத்தில் குடியிருந்த தன்மை: விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.
-
சமுதாய சேவை: விண்ணப்பதாரர்கள் சமுதாய நலத்துக்காக தொண்டு செய்திருத்தல் வேண்டும். இது அளவிடக்கூடிய மற்றும் கண்டறியக்கூடிய சேவையாக இருக்க வேண்டும்.
-
அரசு பணியாளர்: மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும்வர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.
-
சமுதாய செல்வாக்கு: விண்ணப்பதாரரின் உள்ளூர் சமூகத்தில் செல்வாக்கு அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
விண்ணப்பம் செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.05.2025 மாலை 5.45 மணி. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தகுதிவாய்ந்த இளைஞர்கள் விருதிற்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக