பாலக்கோடு, ஏப்.24:
இந்த விழாவிற்காக பி.கொல்லஅள்ளி, கிட்டிகானஅள்ளி, கம்புகாலபட்டி, கொத்தகோட்டை, மிண்டிகிரி, வீரமலை, நல்லப்பநாயக்கனஅள்ளி, கொட்டூர், முருக்கம்பட்டி, கும்மனூர், எர்பையனஅள்ளி, ஒலைபட்டி, வேப்பம்பட்டி, அரூர், செல்லம்பட்டி, வீராச்சிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த குலதெய்வ பக்தர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருவிழா நாளையொட்டி இன்று அதிகாலை முதல் பால், இளநீர், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மூங்கில் கூடையில் கங்கனம் கட்டி, மாவிளக்கு மற்றும் தட்டுவரிசையுடன் பெண் பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமையையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் இந்த சித்திரை திருவிழா, பக்தர்களின் மனதில் ஆனந்தத்தையும் அமைதியையும் ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக