மலைவாழ் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கிய மை தருமபுரி மற்றும் வைகை தொண்டு நிறுவனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

மலைவாழ் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கிய மை தருமபுரி மற்றும் வைகை தொண்டு நிறுவனம்.

தருமபுரி மாவட்டம் ஏரியூர் மூலபெல்லூர் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, மை தருமபுரி அமைப்பு மற்றும் வைகை தொண்டு நிறுவனம் இணைந்து புத்தாடைகள் மற்றும் மேலங்கிகளை வழங்கினர். மலைவாழ் பள்ளி மாணவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமாக, மேலங்கி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவது என்பது மை தருமபுரி அமைப்பின் ஒரு முக்கிய நடவடிக்கையாகவும், சமூக சேவையாகவும் திகழ்கிறது.


இந்த மாணவர்கள் கல்வியில் முன்னேறி, சமுதாயத்தின் ஒளிமணியாக வளர வேண்டும் என்ற வாழ்த்துகளுடன், புத்தாடைகள் மற்றும் மேலங்கிகளை வழங்கினர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசி ராமன் மற்றும் வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுனர் சக்திவேல் கலந்து கொண்டனர். வைகை தொண்டு நிறுவனர் குமரேசன் தலைமை வகித்து நிகழ்வை ஒருங்கிணைத்தார். மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், செந்தில், சண்முகம், கணேஷ் மூர்த்தி, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், ஆசிரியர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மேலங்கி ஆடைகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad