தருமபுரி, ஏப்ரல் 24:
இத்திட்டம் 2024-25 முதல் 2028-29 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் அமையும். இதன் கீழ் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மானியம் 90% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.
திட்டத்தின் பயனாளர்களாக தருமபுரி, அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் வட்டாரங்களைச் சேர்ந்த 19 கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இக்கிராமங்களில் வத்தல்மலை, கத்திரிப்பட்டி, பத்தலமலை, ரெங்கம்பட்டி, சின்னமஞ்சவாடி, எலந்தக்குட்டப்பட்டி போன்ற பகுதிகள் அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு:
-
புதிய மீன்வளர்ப்புக் குளங்கள், மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்கள் அமைத்தல்
-
குளிர்காப்புப் பெட்டியுடன் கூடிய இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல்
-
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு யூனிட்கள் அமைத்தல்
-
பயோபிளாக் மற்றும் நீர் மறுசுழற்சி முறையில் மீன்வளர்ப்பு திட்டங்கள்
-
நவீன மீன்விற்பனை மையங்கள், நான்கு சக்கர குளிர்காப்பு வாகனங்கள், சிறிய மீன்தீவன ஆலை போன்றவற்றுக்கு மானியம் வழங்கல்
இந்த திட்டம், மீன்பிடி தொழிலில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தொழில் முன்னேற்றமும், சுதந்திரமான வாழ்வாதாரமும் உருவாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிந்து பயன் பெறும் வாய்ப்பும் இதில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக