பாப்பாரப்பட்டியில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

பாப்பாரப்பட்டியில் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள அறிவுக்கண் திருமண மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு திமுக பொது உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையிலும், முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன் முன்னிலையிலும் சிறப்பாக நடாத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நிகழ்வில் கலந்து கொண்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் ஆ. மணி அவர்கள், கூட்டத்தில் உரையாற்றினார். அதில், “தருமபுரி மாவட்ட மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத் திட்டங்கள் திட்டமிட்டு, மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறைந்த காலத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன. வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஐந்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். மக்கள் நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் திமுக அரசு தொடர்ச்சியாக செயல்படும்,” என தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்வின் முடிவில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி நன்றியுரையுடன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad