தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமை நடைபெற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிணங்க, மார்ச் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா. காயத்ரி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து தீர்வு பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதுகுறித்து வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. இரா. காயத்ரி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக