மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கிராம மட்டத்தில் 10-20 பெண்களுடன் அமைக்கப்பட்டு, சுழல்நிதி கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப்பகுதிகளில் விற்பனை செய்யும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் முதன்மை விற்பனை வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மகளிர் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடையும் வழி பெற்றுள்ளன.
பயிற்சியில் கலந்து கொண்ட மகளிர் தொழில் முனைவோருக்கு பயிற்சி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். பயிற்சியில் அரூர் வட்டாரம் மற்றும் பேரூராட்சி சார்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சிக்கு பின்பு, அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் சார்பில் அரூர் வட்டத்தில் நடைபெற்று வரும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னசாமி, வட்டாட்சியர் திரு. பெருமாள், தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு. கௌதம், திரு. வ. கருணாநிதி, மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் பயிற்சியாளர் திரு. அப்துல் காதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. ரவிச்சந்திரன், திரு. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக