தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான "டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சி" வழங்கவுள்ளது.
இந்த பயிற்சியின் மூலம், மாணவர்களுக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியின் கால அளவு 30 நாட்கள் ஆகும். பயிற்சி அளிக்கும் நிறுவனமான விவேஷியஸ் அகடாமி, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது. பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (NSDI) அங்கீகாரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் தங்கி படிக்க விரும்பும் இளைஞர்களுக்கான தங்கும் வசதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு ஆகியவை தாட்கோ மூலமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும், ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக