இந்த விழா, மதிமுக பொதுச்செயலாளர் திரு. துரை வைகோ எம்பி அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவை சமூக ஆர்வலர் திரு. ஜெகநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், பள்ளி பருவத்தில் சிறு சேமிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், மரக்கன்றுகள் நட வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், அக்ரஹாரம் - பெரமாண்டபட்டி இடையே உள்ள மேம்பாலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று மற்ற மாணவர்களும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.
விழாவில் தர்மபுரி மாவட்ட மதிமுக செயலாளர் கோ. இராமதாஸ், மாவட்ட அவைத் தலைவர் இரா. குணசேகரன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் இரா. ஜெகநாதன், பள்ளி மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக