காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்ற முகாமில், மூட்டு வலி, கை, கால், காது, மூக்கு, தொண்டை, கண், பல் மற்றும் உடல்நல பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் (BP), இருதய நோய்களுக்கு சிறப்பு பரிசோதனை மற்றும் ECG பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவ நிபுணர்கள் பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய வழிகாட்டுதலும் வழங்கப்பட்டது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர். முன்பதிவு இல்லாமலே, அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டமை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முகாமில் தருமபுரி ஜே.சி.ஐ அமைப்பின் பாபு (தலைவர்), கணேஷ் (செயலாளர்), விஜயகுமார் (முன்னாள் தலைவர்), பிரசன்னா (இயக்குனர் - நிர்வாகம்), ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் பாபு, சேவா பாரதி அமைப்பின் விவேக், ஆதி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆதிமூலம் மற்றும் ஜே.சி.ஐ தருமபுரி பில்லர்ஸ் அமைப்பின் தலைவர் வினோத் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக