மாநில அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – தருமபுரி மாவட்டத்தில் ரூ.8.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

மாநில அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – தருமபுரி மாவட்டத்தில் ரூ.8.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


அரூர், ஏப்ரல் 14:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் பங்கேற்று, பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்து, மொத்தம் 49,542 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழா மாநிலம் முழுவதும் காணொளி ஒளிபரப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் N.N.மஹாலில் நடத்தப்பட்ட நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., பங்கேற்று 1,237 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினர் திரு. ஆ. மணி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வே. சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த விழாவில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் விபரம் வருமாறு:

  • 574 பயனாளிகள்க்கு ரூ.2.63 கோடி – வருவாய் துறை

  • 5 பயனாளிகள்க்கு ₹23,000 – ஆதிதிராவிடர் நலத்துறை

  • 172 பயனாளிகள்க்கு ₹1.05 லட்சம் – பழங்குடியினர் நலத்துறை

  • 68 பயனாளிகள்க்கு ₹8.98 லட்சம் – குடிமை மற்றும் உணவுத்துறை

  • 31 பயனாளிகள்க்கு ₹94.17 லட்சம் – தாட்கோ நிறுவனம்

  • 2 பயனாளிகள்க்கு ₹33.19 லட்சம் – மாவட்ட தொழில் மையம்

  • 6 பயனாளிகள்க்கு ₹2.89 லட்சம் – வேளாண்மை துறை

  • 5 பயனாளிகள்க்கு ₹32.00 லட்சம் – வேளாண்மை பொறியியல் துறை

  • 5 பயனாளிகள்க்கு ₹14.63 லட்சம் – முன்னோடி வங்கி

  • 73 பயனாளிகள்க்கு ₹21.81 லட்சம் – தொழிலாளர் நலத்துறை

  • 150 பயனாளிகள்க்கு ₹1.31 கோடி – கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

  • 137 பயனாளிகள்க்கு ₹2.15 கோடி – மகளிர் திட்டம்

  • 3 பயனாளிகள்க்கு ₹3.29 லட்சம் – தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

  • 6 பயனாளிகள்க்கு ₹5.82 லட்சம் – மாற்றுத்திறனாளிகள் நலத்துறை


மொத்தமாக ₹8,27,29,902 மதிப்பீட்டில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில், பழங்குடியினர் சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், மின்னணு குடும்ப அட்டைகள், பவர் டிரில்லர், டிராக்டர்கள், சொட்டு நீர் பாசனம், தோட்டக்கலை பயிர்கள், சுய உதவிக்குழு கடனுதவிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் மற்றும் தொழிற்கடனுதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரூர் கோட்டாட்சியர் திரு. சின்னுசாமி, முன்னாள் அமைச்சர் முனைவர் பி. பழனியப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, அரூர் பேரூராட்சி தலைவர் திருமதி இந்திராணி, துணைத்தலைவர் திரு தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


பயனாளிகளும் பொதுமக்களும் கலந்து கொண்ட இவ்விழா, அரசு தலைமையில் சமூக நலனுக்காக செயல்படும் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதற்கான ஒரு சிறந்த மாதிரியாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad