தருமபுரி மாவட்டம், ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர். நடராஜன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். நாகராஜன் தலைமையுரையாற்றி, தமிழ் துறைத்தலைவர் முனைவர். அன்பரசன் வாழ்த்துரையினை வழங்கினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக ஏரியூர் உதவி காவல் ஆய்வாளர் திரு. விக்னேஷ் கலந்துகொண்டு, விளையாட்டு விழா சிறப்புரையாற்றினார். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எடப்பாடி ஆண்டு விழா சிறப்புரையினை முனைவர். தமிழரசி ஆற்றினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர். செல்வம் நன்றியுரையாற்றினார்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி பாராட்டினர். இவ்விழாவில் கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக