தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு தடைசெய்த குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில், இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ-கள் சுந்தரமூர்த்தி மற்றும் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். அவ்வழியாக பதிவு எண் இல்லாமல் வேகமாக வந்த சொகுசு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், 3 லட்சம் மதிப்பிலான 1 டன் குட்கா இருப்பது கண்டறியப்பட்டது.
போலீசை பார்த்ததும் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பின்னர், போலீசார் சொகுசு காரையும் குட்காவையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. மனோகரன் தெரிவித்ததாவது, சட்டவிரோதமாக குட்கா கடத்தல் குறித்து தொடர்ந்து தீவிர சோதனை நடைபெறுவதாகவும், குட்கா பான் மசாலா கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் எனவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக