இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கால்வாய் வழியாக அண்ணாமலை அள்ளி, எலுமிச்சனஅள்ளி, கேத்தனஅள்ளி, புலிக்கல், தும்பல அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு சென்றடைகிறது. இது பொதுமக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், பாலமனேரி நீர் நிலை ஓடை புறம்போக்கு நிலத்தை சில தனிநபர்கள் மாமர தோட்டங்கள் அமைத்து, கட்டுமான பணிகளை செய்து ஆக்கிரமித்தனர். இதனால் நீர் வழி தடம் ஏற்பட்டது.
அண்ணாமலை அள்ளி கிராம பொதுமக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் பாலமனேரியில் உள்ள மொத்த ஆக்கிரமிப்புக்களை அகற்றி, ஏரிக்கு தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இன்று, பாலக்கோடு தாசில்தார் ரஜினி, துணை தாசில்தார் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையில், வெள்ளிசந்தை மற்றும் மாரண்டஅள்ளி பிரிவுகளின் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக