புலிக்கரை சென்னியம்பட்டியில் முனியப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஏப்ரல், 2025

புலிக்கரை சென்னியம்பட்டியில் முனியப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புலிக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட சென்னியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.


விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, காப்பு கட்டுதல், தீர்த்த குடம், பால்குட ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, மகா தீபாராதனை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசநீரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து முனியப்பன் சுவாமிக்கு ஊற்றி, மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


பின்னர், புனித தீர்த்த நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad