"பசிக்குதா வாங்க சாப்பிடுங்க" – மை தருமபுரி உணவு சேவை திட்டம் ஐந்தாம் ஆண்டில் நுழைந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஏப்ரல், 2025

"பசிக்குதா வாங்க சாப்பிடுங்க" – மை தருமபுரி உணவு சேவை திட்டம் ஐந்தாம் ஆண்டில் நுழைந்தது.

தர்மபுரி – சமூக சேவையை வாழ்வாக கொண்ட மை தருமபுரி அமைப்பின் "பசிக்குதா வாங்க சாப்பிடுங்க" உணவு சேவை திட்டம், தனது ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை தமிழ் புத்தாண்டு தினத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

2013ஆம் ஆண்டு முதல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு மனிதநேயமிக்க சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, கோவிட் ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கியதில் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தது.


அதன் தொடர்ச்சியாக, 2021ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டில், சாலையோரத்தில் பசியில் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. இப்போது இது தினமும் மதியம் மற்றும் மாலை இரு வேளைகளில், சுமார் 400 நபர்களுக்கு இலவச உணவு வழங்கும் ஒரு நிலையான திட்டமாக வளர்ந்துள்ளது. முக்கியமாக, தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில், நோயாளிகளின் உறவினர்கள், பசியால் துயரப்படும் பொதுமக்கள் ஆகியோருக்கு இந்த சேவை பலருக்கும் வாழ்வாதாரமாக மாறியுள்ளது.


இந்த ஐந்தாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட அறங்காவலர் குழு பொறுப்பாளர் அன்பழகன், குழந்தைகள் நல மருத்துவர் தீபக், ரயில்வே ஒப்பந்ததாரர் பரமசிவம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


மேலும் மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, உதயசூரியன், ஈஸ்வர், வினோத் குமார், TVS சண்முகம், மெக்கானிக் கணேசன், ஆசிரியர் தண்டபாணி, பத்திரிகையாளர் பிரேம் உள்ளிட்டோரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டனர்.


மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா துவக்க விழாவை இனிதே வரவேற்று, கடந்த நான்கு ஆண்டுகளில் நிகழ்த்திய சேவைகளையும், மக்கள் நலனுக்காக தொடரப்போகும் பணிகளையும் கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அமைப்பின் செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ஜலபதி ராஜா ஆகியோர் விருந்தினர்களை வரவேற்று கௌரவித்தனர்.


உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மற்றும் செயலாளர்கள் செந்தில் குமார், கிருஷ்ணன், சண்முகம், ராகவ் திலக், முஹம்மத் ஜாபர், சையத் ஜாபர் உள்ளிட்டோர் விழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். தன்னார்வலர்கள் ஜெய்சூர்யா, மூர்த்தி, சபரிமுத்து, அருண் பிரசாத், கணேஷ், குணசீலன், கோகுல்ராஜ், வள்ளி, பிரேமா, அம்பிகா ஆகியோர் சேவையில் உறுதுணையாக இருந்தனர்.


"பசி தீர்ப்போம், மனிதநேயம் காப்போம்" என்ற தொனியில் தொடரும் இந்த சேவை, தர்மபுரியின் சமூக நல இயக்கங்களுக்கே ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad