தருமபுரி, ஏப்ரல் 17:
மை தருமபுரி NGO மற்றும் வைகை NGO தொண்டு நிறுவனங்கள் சார்பில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் உள்ள இருளர் குடியிருப்புகளில் வசிக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கு புத்தாடைகள் வழங்கி மனமுவந்த சேவையை மேற்கொண்டன.
மனிதநேய மனப்பான்மையோடு பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வரும் வைகை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குமரேசன் தலைமையில், ஏரியூர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மூலபெல்லூர், சிடுமனஹள்ளி, சத்தியநாதபுரம், தண்டா ஏரியூர், மூங்கில் மடுவு போன்ற கிராமங்களில் வசிக்கும் இருளர் சமூகத்தை சேர்ந்த சுமார் 300 குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மை தருமபுரி அறக்கட்டளையின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், நிர்வாகத்தினர் செந்தில், சண்முகம், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, புத்தாடை வழங்கிய வைகை குழுவினருக்கு நன்றியை தெரிவித்தனர். மேலும், இத்தொடர்ச்சியான உதவித் திட்டங்கள் இன்னும் விரிவாகப் பிராந்தியங்களுக்குள் விரிவடையக் கூடுமென நம்பிக்கை தெரிவித்தனர்.
சமூக நீதியை நோக்கிச் செயல்படும் இவ்வாறு இரு தொண்டு நிறுவனங்களின் இணைந்த முயற்சி, வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த நாளாக அமைந்ததுடன், இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து பல இடங்களில் நடத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக